Thursday, May 22, 2008

மதி மயக்கம்

ஈ மொய்க்கும் மலரொப்ப-விண் 
மீன் மொய்க்கும் மகளாய்
மஞ்சள் மதி

மலர் தீண்டும் தென்றலீடாக-என்
மனம் கோதும் விரல்களாய்
வெள்ளொளிக் கிரணங்கள்

பார் தறித்த போர்வைமேல்
பால் தெளிக்கும் போக்காய்
மதிமங்கையின் நடை

மாயவித்தகன் ஆட்டுவிக்கும் பதுமைபோல்-என்
தூயசித்தம் கெட்டுவிட்டு சிதரவைக்கும்
வான்மகளின் நளினங்கள்

குளிர்கூசி சிலிர்க்கும் சிறுவனாய்
நாணங்கூசி நெளிந்து நிற்கிறான்-கடலரசன்
நிலாமகள் நகைக்கண்டு

2 comments:

  1. அருமையான கவிதைகள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  2. cant believe ppl still write these kinda poems...
    excellent 1...

    ReplyDelete