இத்தனை நாள் பிழைத்தேனோ
இனியும் இறப்பதற்கு
எத்தனை தான் உழைத்தேனோ
பொற்குடமேதும் நிறைப்பதற்கு
பின்னும் ஏதோ தயக்கம்
இறந்த பின்பும் தானோ மயக்கம்
நின்றிடும் தானே இயக்கம்
அறிந்தும் ஏனோ கலக்கம்
தன்னழிவின் சாத்தியம் சொற்பம்
இறைக்கும் இதுவோ குழப்பம்
இருந்தும் உண்டோ நிறுத்தம்
இருத்தும் விசையின் விருப்பம் ?
:)
ReplyDeleteசட்டி சுட்டதடா ... கை விட்டதட ...
ReplyDeleteபுத்தி கேட்டதடா... நெஞ்சைத் தொட்டதடா ...