Thursday, October 18, 2007

வந்தான் வருணன்!!

மின்னொளிப் பந்தங்கள் வழிகாட்ட
பேரிடிப் பறைகள் தாளங் கொட்ட
கருமுகிற் தேரிலேறியே
புலன் சேர்ந்து புண்ணியஞ் சேர்க்கத்
தவழ்ந்து வந்தான் !!
நிலன் நோக்கும் ஆவல் தாளாமல்
மேக தாரகைகளை விடுத்து
தான் மட்டும் தாழ்ந்து வந்தான் !!
மண்ணளக்கும் ஆசை மாளாமல்
மணிமணியாய்ச் சிதறி வந்தான் !!

4 comments:

  1. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_16.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
    Replies
    1. திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.. இவ்வளவு தாமதமாக கவனித்ததற்கு மன்னிக்கவும்

      Delete
  2. வருணன் வரட்டும் . வளம் வழங்கட்டும்..

    ReplyDelete