உதிரம் உதிராக் குறையென
வேர்வையூற்றி வேரூன்றச் செய்து
நிலம் பார்த்து நீர்பாய்ச்சி
சேறுபூசி சேர்ந்து வயலாடி
வயல் பார்த்து உரமிட்டு
கண்விழித்துப் பயிர் வளர்த்து
நிலமகளுக்குப் பச்சைத் துகிற் பரிசளித்தான்...
Sunday, February 10, 2008
Monday, December 17, 2007
பூக்காடு
மனங்கசந்து கண்கலங்கிய
தருணமெண்ணி இதழ்முறுவல் பூக்கும்...
கூடியாடி களித்துகுதித்த
காலமெண்ணி இமைதுளி பூக்கும்...
தருணமெண்ணி இதழ்முறுவல் பூக்கும்...
கூடியாடி களித்துகுதித்த
காலமெண்ணி இமைதுளி பூக்கும்...
Tuesday, October 30, 2007
மரம்
கலமேந்தி களங்கள் பார்த்தான்
புலங்கள் நிறுத்தினான்
உளைவேக அடுப்பனல் வளர்த்தான்
வளங்கள் பெருக்கினான்
தன்குடைகீழ் குடிகள் காத்தான்
கொடிகள் தாங்கினான்
கூர்முனைகட்கு மார் காட்டினான்
வெட்டுண்ணப் பிறந்தவன்
மறைவழுவா முறைதவறா நெறிபிறழா
மறமுடை மரமாமவன்.
மரத்திற்கும் மறவனுக்கும் இடையில் ஒரு சிலேடை.
பயங்கொள்ளி பாரதி
கருத்துகள் ஒன்று
சிந்தனைகள் ஒன்று
கொள்கைகள் ஒன்று
கோபங்கள் ஒன்று
எனக்கும் அவனுக்கும்
ஆனால்...
நான் பயங்கொள்ளி...
அவன் பாரதி!!!
சிந்தனைகள் ஒன்று
கொள்கைகள் ஒன்று
கோபங்கள் ஒன்று
எனக்கும் அவனுக்கும்
ஆனால்...
நான் பயங்கொள்ளி...
அவன் பாரதி!!!
Thursday, October 18, 2007
வந்தான் வருணன்!!
மின்னொளிப் பந்தங்கள் வழிகாட்ட
பேரிடிப் பறைகள் தாளங் கொட்ட
கருமுகிற் தேரிலேறியே
புலன் சேர்ந்து புண்ணியஞ் சேர்க்கத்
தவழ்ந்து வந்தான் !!
நிலன் நோக்கும் ஆவல் தாளாமல்
மேக தாரகைகளை விடுத்து
தான் மட்டும் தாழ்ந்து வந்தான் !!
மண்ணளக்கும் ஆசை மாளாமல்
மணிமணியாய்ச் சிதறி வந்தான் !!
பேரிடிப் பறைகள் தாளங் கொட்ட
கருமுகிற் தேரிலேறியே
புலன் சேர்ந்து புண்ணியஞ் சேர்க்கத்
தவழ்ந்து வந்தான் !!
நிலன் நோக்கும் ஆவல் தாளாமல்
மேக தாரகைகளை விடுத்து
தான் மட்டும் தாழ்ந்து வந்தான் !!
மண்ணளக்கும் ஆசை மாளாமல்
மணிமணியாய்ச் சிதறி வந்தான் !!
Subscribe to:
Posts (Atom)